Sunday, May 19, 2024
Home » டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக்

டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக்

by kannappan

டிவிஎஸ் நிறுவன ஸ்கூட்டர்கள் விற்பனை எண்ணிக்கை 50 லட்சத்தை தொட்டுள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் வகையில் புதிய ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டரை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரீகல் பர்பிள் மற்றும் மிஸ்டிக் கிரே ஆகிய 2 வண்ணங்களில் உள்ளது. கருப்பு நிற மிரர், புதிய கிராபிக்ஸ் டிசைன்,  முன்புற டிஸ்க் பிரேக், ஒரே லாக் சிஸ்டம், வைசர் என தோற்றத்தில் அசத்தலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்ஜினில் மாற்றமில்லை. இதில் உள்ள 109.7 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 7.37 பிஎச்பி பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலையாக ரூ.85,866 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடர் இசட்எக்ஸ் ஸ்மார்ட் கனெக்ட்டை விட ரூ.2,200 அதிகம்….

You may also like

Leave a Comment

19 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi