Monday, May 13, 2024
Home » செங்கையில் 26,12,538 வாக்காளர்கள் காஞ்சியில் 13,24,581 பேர்: வரைவு பட்டியல் வெளியீடு

செங்கையில் 26,12,538 வாக்காளர்கள் காஞ்சியில் 13,24,581 பேர்: வரைவு பட்டியல் வெளியீடு

by Karthik Yash

காஞ்சிபுரம், அக்.28: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் ெவளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வரைவு வாக்காளர்கள் பட்டியல் விவரம் வருமாறு: காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேற்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்று கொண்டார். மாவட்டத்தில், 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் 13,24,581.

இதில் ஆண்கள் 6,48,802, பெண்கள் 6,79,597. இதர வாக்காளர்கள் 182. மேலும், 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமமுமின்றி வாக்களிக்க ஏதுவாக புதிய வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1,398 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் 7 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி தலைவர்கள் முன்னிலையில் செங்கல்பட்டு சப்-கலெக்டர் ஷாகீதா பர்வின் வெளியிட, தேர்தல் பிரிவு தாசில்தார் சங்கர் பெற்று கொண்டார்.

காஞ்சிபுரம்
தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம்
ஆலந்தூர் 187615 192086 57 379758
பெரும்புதூர் 179657 189828 60 369545
உத்திரமேரூர் 127960 137597 43 265598
காஞ்சிபுரம் 149570 160088 22 309680
மொத்த வாக்காளர்கள் 644802 679597 182 1324581
செங்கல்பட்டு
சோழிங்நல்லூர் 326676 325279 110 652065
பல்லாவரம் 210450 212647 41 423138
தாம்பரம் 194662 197312 63 392037
செங்கல்பட்டு 201312 208415 58 409785
திருப்போரூர் 143867 148495 50 292412
செய்யூர் 108720 111745 27 220492
மதுராந்தகம் 109484 113031 92 222607
மொத்த வாக்காளர்கள் 1295171 1316924 441 2612536

You may also like

Leave a Comment

eleven − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi