Sunday, May 12, 2024
Home » கும்பகோணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கும்பகோணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Ranjith

 

கும்பகோணம், மார்ச்15: கும்பகோணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் இவ்விழா நடைபெற்றது. விழாவில் ரூ.16 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் 16 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.97,000 மதிப்புள்ள விலையில்லா மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரும், இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்புள்ள தையல் இயந்திரம், காது கேளாத 2 பயனாளிகளுக்கு காணொலி மூலம் பேசிக்கொள்ள தலா ரூ.15,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இறந்தால் ஈமச்சடங்கிற்கு உதவிடும் வகையில் 2 பேருக்கு தலா ரூ.17,000 காசோலைகளை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் ஒன்றிய துணைத்தலைவர் உள்ளூர் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பம்பப்படையூர் முத்துச்செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், மாநகர துணை செயலாளர் பிரியம் சசிதரன், தஞ்சாவூர் மாவட்ட பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் முருகேஸ்வரி, தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி இஸ்ரேல், மாமன்ற உறுப்பினர் அனந்தராமன், கிளை செயலாளர் மூர்த்தி, பொறியாளர் செந்தூரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

six + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi