Wednesday, May 15, 2024
Home » கர்மவினைகளை தீர்த்து வைக்கிறார் குழந்தை பாக்கியம் அருளும் செந்தில் ஆண்டவர்

கர்மவினைகளை தீர்த்து வைக்கிறார் குழந்தை பாக்கியம் அருளும் செந்தில் ஆண்டவர்

by kannappan

அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப்பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது. படையெடுத்துச்செல்லும் தளபதி தனது வீரர்களுடன் தங்கும் இடம் தான் படைவீடு ஆகும். அப்படி சூரபத்திரனை வதைக்க முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடு தான் திருச்செந்தூர் ஆகும்.தல சிறப்புகள்: சூரபத்திரன் என்ற அரக்கனை முருகப்பெருமான் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தனது வைர வேல் கொண்டு வதைத்து வெற்றிகொண்டார். இது நிகழ்ந்த இடமே திருச்செந்தூர் ஆகும். எனவே தான் ஒவ்வொரு வருடமும் கந்தசஷ்டி விழாவன்று ‘சூரசம்காரம்’ இங்கே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடற்கரையில் அமைந்துள்ளது. சிலப்பதிகார குறிப்புகள் படி இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. இவ்விடம் முன்னர் ‘திருச்சீரலைவாய்’  என்றழைக்கப்பட்டதாம். பெயர்க்காரணம் சூரபத்திரனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் ‘ஜெயந்திநாதர்’ என்று அழைக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில்  ‘செந்தில்நாதர்’ என்று மருவியதாம். அதுபோலவே இவ்வூரும் ‘திருஜெயந்திபுரம்’ என்பதிலிருந்து திருச்செந்தூர் என்றானதாக சொல்லப்படுகிறது. கோயில் அமைப்பு திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டு 150 அடி உயரமுடையதாகும். இங்கே முருகன் இடது கையில் தாமரை மலருடன் ஜடாமுடி கொண்டு சிவயோகி போல காட்சிதருகிறார். முருகனின் சிலைக்கு பின்னால் இடதுபுற சுவரில் போரில் வெற்றிபெற்றுவந்த முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதற்கு முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு பூசை செய்யப்படுகிறது. மேலும் முருகன் சந்நிதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதி ஒன்றும் இருக்கிறது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்கதரிசனம் செய்ய வாரநாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் பூஜை முறை திருச்செந்தூர் முருகன் கோயில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது. திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடைபெறுகிறது. சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை பலவிதமான நைவேத்தியங்கள் செந்தில்நாதருக்கு படைக்கப்படுகிறது.  திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் என்று எடுத்துக்கொண்டாலே சந்தான பாக்கியம் அருள்பவர் ஆவார். குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான். செந்தில் ஆண்டவர், குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம்.  இதுபோல் மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விச்செல்வமும் அருள்கிறார். கர்ம வினைகளையெல்லாம் யாராலும் நீக்க முடியாது. ஆனால் அதனையும் திருச்செந்தூர் முருகனால்தான் தீர்க்கமுடியும் என்பது சான்றோர் வாக்கு. …

You may also like

Leave a Comment

14 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi