செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து முதலில் வெல்லப்பாகு தயார் செய்ய வேண்டும். பின்னர், கசகசா, முந்திரி, ஃப்ரஷ்ஷாக துருவி அரைத்த தேங்காய் மற்றும் ஏலக்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக விழுது போல மைய அரைக்க வேண்டும். பின்பு வெல்லப்பாகில் இந்த அரைத்த கசகசா விழுதைச் சேர்த்து கொதி வரும் வரை வேகவைக்க வேண்டும். கசகசா கீர், பாயசம் பதத்துக்கு வந்ததும் இறக்கிவிட வேண்டும். பின்னர், முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்து சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். சுவையான ஆரோக்கியமான கசகசா கீர் தயார். …
கசகசா கீர்
previous post