சென்னை: திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். அதனை புகைப்படம் எடுத்து தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு, ‘நான் தடுப்பூசி போட்டுவிட்டேன். நீங்களும் தைரியமாக போட்டுக் கொள்ளுங்கள்’ என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.அந்த வரிசையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகன் அமீனுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மகனும் அணிந்திருந்த மாஸ்க் வித்தியாசமாக இருந்தது. அவரது ரசிகர்கள் அந்த மாஸ்க் குறித்த விவரத்தை இணையதளத்தில் தேட ஆரம்பித்துவிட்டனர். அந்த மாஸ்க் எல்ஜி பியூரிகர் என்கிற மாஸ்க் ஆகும். இது ஒரு காற்று சுத்திகரிப்பு மாஸ்க். நாம் எவ்வளவு அசுத்தமான காற்றை சுவாசித்தாலும் இதில் உள்ள பில்டர்கள் அவற்றை சுத்தமாக்கி தருமாம். அதோடு இதற்குள் இன்வெர்ட்டர் போன்று செயலாற்றும் இரண்டு உபகரணங்களும் பொருத்தப்பட்டிருக்கிறதாம். இதன் விலை இந்திய மதிப்பில் 14 ஆயிரம் ரூபாய்….