பெரம்பூர்: தண்டையார்பேட்டை 4வது மண்டலத்திற்கு உட்பட்ட எம்கேபி நகர் மணலி சாலை பகுதியில் உள்ள தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர்.ஆக்குவா மினரல் வாட்டர் கம்பெனியை உதவி வருவாய் அலுவலர் ராமன் மற்றும் சுரேஷ், வரி மதிப்பீட்டாளர் ரமேஷ், சீனிவாசன், உரிமம் ஆய்வாளர் ஜோன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கம்பெனி உரிய உரிமம் இல்லாமல் நடத்தியது தெரியவந்தது. கம்பெனியை மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். …