Tuesday, May 21, 2024
Home » ‘ஆப்ஸ்’ விளம்பரத்தால் சர்ச்சை நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நோட்டீஸ் சாலை போக்குவரத்து கழகம் அதிரடி

‘ஆப்ஸ்’ விளம்பரத்தால் சர்ச்சை நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நோட்டீஸ் சாலை போக்குவரத்து கழகம் அதிரடி

by kannappan

ஐதராபாத்: கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ராபிடோ’ ஆப்ஸ் விளம்பரத்தில், தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்துகளை கொச்சைப்படுத்தும் விதமாக அல்லு அர்ஜூன் நடித்துள்ளார். அவரது நடிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகம், அல்லு அர்ஜுனுக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், ‘ராபிடோ’ ஆப்ஸ் பயணத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் நடித்துள்ளீர்கள். இதை தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக நிர்வாகம், பயணிகள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, எங்கள் தரப்பில் அனுப்பப்பட்ட சட்ட நோட்டீசுக்கு அல்லு அர்ஜூன் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சஜ்ஜனார் கூறுகையில், ‘நடிகர்கள், பிரபலங்கள் சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தும் வகையிலான விளம்பரங்களில் நடிக்க வேண்டும். நடிகர் அல்லு அர்ஜுனுக்கு யூடியூப் மூலம் வருமானம் கிடைக்கிறது. மாநில சாலை போக்குவரத்து கழகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடித்துள்ளார். அதனால்தான் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். எங்களது நிறுவனம் சாதாரண மக்களுக்காக சேவையாற்றி வருகிறது. பிரபலங்கள் உள்ளிட்ட நபர்கள் மக்களின் பொது போக்குவரத்துக்கு தீங்கு விளைவிக்கும் எவ்வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்’ என்றார்….

You may also like

Leave a Comment

twelve − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi