ஊட்டி, ஆக.30: குன்னூர் அருகே உபதலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. குன்னூர் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இலவச பல் மருத்துவ முகாமில் நீலகிரி பல் மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். லயன்ஸ் கிளப் தலைவர் அஸ்வினி வரவேற்றார். தொடந்து பள்ளியில் பயிலும் 175 மாணவர்களுக்கு பல் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பற்கள் சுகாதாரம் தொடர்பாக ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினர். தீவிர பல் சார்ந்த பிரச்சனை உள்ள மாணவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. முகாமில் பல் மருத்துவர்கள் இனியன், பாவனா, டைட்டஸ், ரூபி, ஜோஸ், பிரவீன், கிருஷ்ணன், குமார், மேகா, அக்சய், டேனியா ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவில் குன்னூர் அரிமா சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், முகாம் நடத்திய மருத்துவர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் ஐய்ரின் ரெஜி நன்றி கூறினார்.