எப்படிச் செய்வது?மேல் மாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும்
கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்திற்கு
பிசைந்து மூடி 15 நிமிடத்திற்கு வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய்
விட்டு பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி உதிர்
உதிராக வந்ததும் இறக்கவும். பூரணம் ரெடி. பிசைந்த பூரி மாவிலிருந்து
எலுமிச்சைப்பழ அளவு உருண்டையாக எடுத்து சொப்பு போல் செய்து 1 டேபிள்ஸ்பூன்
பூரணத்தை உள்ளே வைத்து மூடி பூரிகளாக திரட்டிக் கொள்ளவும். கடாயில் பொரிக்க
எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கி திரட்டிய பூரி மாவை போட்டு
பொரித்தெடுத்து எண்ணெயை வடித்துக் கொள்ளவும். சாஸ், கிரீன் சட்னி, இனிப்பு
சட்னியுடன் பரிமாறவும்.
பச்சைப் பட்டாணி பூரி
previous post