சிவகங்கை, பிப். 17: சிவகங்கை அரண்மனைவாசல் முன் தொழிலாளர் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர் நியமன முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் உமாநாத், எல்பிஎப் மண்டல தலைவர் முருகன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் மாரிமுத்து, ஏஐ டியுசி மாவட்டத் தலைவர் காளைலிங்கம் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.