ஈரோடு,மே26:ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக அரியலூர் மாவட்டத்தல் இருந்து ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரயில் நேற்று காலை ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்து. பின்னர் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொதுவிநியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.