சார்ஜா: வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெ.இண்டீஸ் 49.5 ஓவரில் 306 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் 54, ஜான்சன் சார்லஸ் 63 ரன் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களே எடுத்தது. இதனால் வெ.இண்டீஸ் 78 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.