சென்னை: புழல் ஏரியில் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2266 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட நீர் இருப்பு 746 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 466 மில்லியன் கன அடியாக உள்ளது.