டொயோட்டா நிறுவனம், இனோவா ஹைகிராஸ் ஜிஎக்ஸ் வேரியண்டின் ஸ்பெஷல் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுளளது. இது அதிகபட்சமாக 169 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஸ்டாண்டர்டு வேரியண்டுடன் ஒப்பிடுகையில், தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. ரேடியேட்டர் கிரில்லில் குரோம் பூச்சு மூலம் கூடுதலாக அழகுபடுத்தப்பட்டுள்ளது.
பம்பர்களில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், ஸ்டாண்டர்டு ஜிஎக்ஸ் வேரியண்டில் உள்ள டேஷ்போர்டு இடம்பெற்றுள்ளன. ஸ்டாண்டர்டு வேரியண்டுடன் ஒப்பிடும்போது பெரிய அலாய் வீல்கள், இடம் பெற்றுள்ளன. காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் பிரவுன் நிறங்கள் கொண்ட டூயல் டோன் தீம் இடம் பெற்றுள்ளது. 7 மற்றும் 8 சீட் என இரண்டு வகைகளாக கிடைக்கும்.