ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள்: ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில், வெங்கடேசப் பெருமாளையும், பத்மாவதி தாயாரையும் வழிபடுதல் சிறந்த பலன்களைத் தரும்.
மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில், சிவபெருமானையும், வைத்தீஸ்வரரையோ அல்லது மருந்தீஸ்வரரையோ வழிபடுதல் சிறப்பான தனவரவிற்கான வழிகளைத் தரும். இந்த இரு தினங்களிலும் காலையிலும் மாலையிலும் இரு முறை வழிபடுவதால் இன்னும் சிறப்பான பலன்கள் உண்டு.
கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், அங்காளபரமேஸ்வரி அல்லது கருப்பண்ண சுவாமியை வழிபடுதல் தனவரவிற்கான வழிகளை கொடுக்கும்.