200
சென்னை: தமிழ்நாட்டில் ஈரோடு, நாகை, கடலூர், திருத்தணி உள்ளிட்ட 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது. திருத்தணியில் இதுவரை இல்லாத அளவில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர்.