Saturday, May 4, 2024
Home » தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவு: இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவு: இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

by Arun Kumar

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரியில் அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரியில் அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. கள்ளக்குறிச்சியில் 79.25% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 53.91 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) அமைதியாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

தமிழ்நாடு முழுவதும் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வெளியான அறிவிப்பில் 60 சதவீதம் வாக்குகள் பதிவானதாகச் சொல்லப்பட்டது. இரண்டு அறிவிப்புக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது சர்ச்சையானது.

இந்நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையம் இறுதியான வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் 72.47 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு 3.01 சதவீதம் குறைந்துள்ளது.

திருவள்ளூர் – 68.31, வட சென்னை – 60.13 , தென் சென்னை – 54.27 , மத்திய சென்னை – 53.91, ஸ்ரீபெரும்புதூர் – 60.21, காஞ்சிபுரம் – 71.55 , அரக்கோணம் – 74.08 , வேலூர் – 73.42, கிருஷ்ணகிரி – 71.31 , தருமபுரி – 81.48 (அதிகபட்ச வாக்குப்பதிவு), திருவண்ணாமலை – 73.88 , ஆரணி – 75.65 , விழுப்புரம்- 76.47 , கள்ளக்குறிச்சி – 79.25 , சேலம்- 78.13 , நாமக்கல் – 78.16 , ஈரோடு – 70.54 , திருப்பூர் – 70.58 , நீலகிரி – 70.93 , கோவை – 64.81 , பொள்ளாச்சி -70.70 , திண்டுக்கல் – 70.99 , கரூர்- 78.61 , திருச்சி -67.45 , பெரம்பலூர் – 77.37 , கடலூர் – 72.28 , சிதம்பரம் – 75.32 , மயிலாடுதுறை – 70.06 , நாகப்பட்டினம் – 71.55 , தஞ்சாவூர்- 69.18 , சிவகங்கை – 63.94 , மதுரை – 61.92 , தேனி – 69.87 , விருதுநகர் -70.17 , ராமநாதபுரம் -68.18 , தூத்துக்குடி – 59.96 , தென்காசி – 67.55 , திருநெல்வேலி – 64.10 , கன்னியாகுமரி – 65.46 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi