கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததல் நாம் தமிழர் கட்சியினர் கடும் விரக்தி அடைந்துள்ளனர். இந்த விரக்தியின் வெளிப்பாடாக விருதுநகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், திருவள்ளுவர், சீமான் படங்களுடன், ‘சின்னம் என்னடா சின்னம்! மக்களின் அன்பே எங்களின் சின்னம்!! போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் !!! நம் பிள்ளைகளை காப்போம்!!! விருதுநகர் சட்டமன்றத் தொகுதி’ ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.