சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் இந்துத்துவவாதியாக வாழ்ந்தார் என்று அண்ணாமலை கூறியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை குறி வைத்து தாக்கி பேசிவருவதாக அக்கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர். அண்ணாமலை கருத்துக்கு ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.