![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/18-61.jpg?type=webp&quality=80)
- சிஎஸ்கே கேப்டன் தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாடும் அளவுக்கு நல்ல உடல்தகுதியுடன் உள்ளதாக ஸ்பின்னர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
- தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த இடது கை வேகப் பந்துவீச்சாளர் மோஷின் கான், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட உள்ளார்.
- இந்திய வில்வித்தை ரீகர்வ் அணியின் பயிற்சியாளராக தென் கொரியாவை சேர்ந்த பேக் வூங் கி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வரை வூங் கி பயிற்சியாளராக செயல்படுவார்.