சேலம் : சேலம் மாவட்டத்தில் கருப்பூரில் முடிவுற்ற பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.653 கோடி மதிப்பீட்டில் இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டம் தொடக்கம்; ரூ.102 கோடியில் சேலம் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிக்கு கூடுதல் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.