Sunday, October 6, 2024
Home » ராயல் என்பீல்டு ஷாட்கன் 650

ராயல் என்பீல்டு ஷாட்கன் 650

by Kalaivani Saravanan

ராயல் என்பீல்டு நிறுவனம், ஷாட்கன் 650 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில், சூப்பர் மெட்டியோரில் உள்ளது போன்றே 648 சிசி பேரரல் டிவின் ஆயில் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 46 எச்பி பவரையும், 5,650 ஆர்பிஎம்-ல் 52.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. மேலும், எல்இடி ஹெட்லாம்ப், டிஜிட்டல் – அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், ராயல் என்பீல்டு விங்மேன் ஆப்ஸ் மூலம் பைக் இருக்கும் இடம், பெட்ரோல், இன்ஜின் ஆயில், சர்வீஸ் நினைவூட்டலை அறிந்து கொள்ளும் வசதி உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தாலியில் 2021ல் நடந்த மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் இடம் பெற்ற எஸ்ஜி650 கான்செப்ட் பைக் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷோரூம் ஷாட்கன் 650க்கான முன்பதிவுகள் ஏற்கெனவே துவங்கி விட்டன. முன்பதிவு செய்தவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பைக் டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 4 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக ரூ.3,59,430 எனவும், டாப் வேரியண்ட் ரூ.3,73,000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi