டெல்லி: குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லி கடமை பாதையில் பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் மகளிர் படையினர் அணிவகுத்து சென்றனர். குடியரசு தின அணிவகுப்பை மகளிர் அணி தொடங்கி வைப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.