டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் கர்தவ்யா பாதையில் 1500 நடனக் கலைஞர்களின் 30 நாட்டுப்புற நடன பாணிகளின் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி குடியரசு தின விழாவில் அயோத்தி ராமர் கோயிலை மையப்படுத்தி உத்தரபிரதேச மாநில அலங்கார ஊர்தி இடம்பெற்றது. டெல்லியில் நடைபெற்ற 75வது குடியரசு தினவிழா அணி வகுப்பில், பண்டைய கால குடவோலை முறையை பறைசாற்றிய தமிழ்நாடு அரசின் ஊர்தியின் அழகை ஜனாதிபதி திரெளபதி முர்மு ரசித்தார்.