Wednesday, May 15, 2024
Home » ‘இந்தியாவில் நெருக்கடியில் ஜனநாயகம்’வாயை மூடியபடி மோடி இருக்கும் புகைப்படம்: இங்கிலாந்து பத்திரிகை விளாசல்

‘இந்தியாவில் நெருக்கடியில் ஜனநாயகம்’வாயை மூடியபடி மோடி இருக்கும் புகைப்படம்: இங்கிலாந்து பத்திரிகை விளாசல்

by Neethimaan

புதுடெல்லி: இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் நெருக்கடியில் இருப்பதாக கூறும் வகையில் பிரதமர் மோடி வாயை மூடியபடி இருக்கும் அட்டைப்படத்தை இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான ‘பிரிட்டிஷ் ஹெரால்டு’ வெளியிட்டு உள்ளது. இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான பிரிட்டிஷ் ஹெரால்டு ‘இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான விதிமுறைகளும் வன்முறைகளும்; எச்சரிக்கை மணி ஒலிக்கிறது’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த பத்திரிகையின் அட்டை படத்தில் வாயை மூடிக்கொண்டு பிரதமர் மோடி இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மோடி படத்திற்கு கீழே, ஜனநாயகம் தீப்பற்றி எரிவது போல் காட்டப்பட்டு உள்ளது.

மேலும் இந்த அட்டைப்படம் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது. பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். ஊடகங்களுக்கு பதில் சொல்லக்கூட அவர் தயாராக இல்லை. அவர் தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அதிபர் பைடனுடன் சேர்ந்து ஊடகங்களைச் சந்தித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் அந்த கட்டுரையில் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 2002 குஜராத் கலவரத்தின் போது மோடி மவுனம் கடைப்பிடித்ததை போல மணிப்பூர் கலவரத்தின் போதும் மவுனத்தை கடைபிடிப்பதாக அந்தக் கட்டுரை குற்றம் சாட்டுகிறது.

மேலும் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ல் 140 ஆக இருந்த பத்திரிக்கை சுதந்திரம் குறித்த இந்தியாவின் நிலை மோடி ஆட்சியில் 161 ஆக சரிந்துள்ளது என்றும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிக இணையத் தடைகள் உள்ளதாகவும் அது கூறுகிறது. இதே ‘பிரிட்டிஷ் ஹெரால்டு’ பத்திரிகைதான் 2019ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிரதமர் மோடியை ‘‘உலகின் சக்திவாய்ந்த நபர்” என்று வர்ணித்து இருந்தது. கொரோனா தொற்று நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதிலும், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதிலும் மோடியின் தலைமையை பாராட்டி செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

18 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi