மேற்குவங்கம்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளனர். 73 பேர் ஒடிசாவின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கி உடல் சிதைந்த நிலையில் உள்ள 182 பேரை அடையாளம் காண முடியவில்லை என்று மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார்.