சென்னை: ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இரவுநேர புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 17ம் தேதி இரவு 10.25 முதல் 18ம் தேதி காலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இரவு நேரத்தில் 15 புறநகர் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 புறநகர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.