Sunday, June 23, 2024
Home » நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை: நடிகர் ரஜினிகாந்த்!

நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை: நடிகர் ரஜினிகாந்த்!

by Francis

சென்னை: மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி செல்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். டெல்லி புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்தநிலையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்லும் முன்பு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி செல்கிறேன். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை என்று கூறியுள்ளார்.

 

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi