Wednesday, May 22, 2024
Home » காசிமேட்டில் உடற்பயிற்சி கூடம் எம்எல்ஏக்கள் திறப்பு

காசிமேட்டில் உடற்பயிற்சி கூடம் எம்எல்ஏக்கள் திறப்பு

by Arun Kumar

தண்டையார்பேட்டை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 32 லட்சம் ஒதுக்கப்பட்டு உடற்பயிற்சி கூடம் நவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டது.

உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் நடைபெற்றது. சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு உடற்பயிற்சி கூடத்தை திறந்துவைத்தனர்.

இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உடற்பயிற்சி செய்து காட்டினர். தண்டையார்பேட்டை, காசிமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ந்த நிகழ்ச்சியில், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளர் லட்சுமணன், சென்னை மாநகராட்சி 4வதுமண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் இளவரசன், மாமன்ற உறுப்பினர் பவித்ரா, நரேஷ், திமுக நிர்வாகிகள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

5 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi