கடலூர்: கொள்கை என்னவென்று கூறட்டும் பிறகு பார்க்கலாம்..” என நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கி.வீரமணி தலைமையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட கழகத்திற்கு புதிய செயலவை தலைவர் நியமனம், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் நமது கடமையும், திராவிட கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் கடமை என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி; ஊடகத்தின் மூலம் மீண்டும் மோடி என்ற மீண்டும் ஒன்றிய அரசு என போலி பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே நிலையான நீதியான ஆட்சி நடைபெறுவதாகவும்,நம்பர் 1 ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என தெரிவித்தார்.கடவுள் மறுப்பு கொள்கை குறைந்து வருவதாகவும் சபரி மலை சென்ற பக்தர்களின் கூட்டம் அதிகளவு என செய்தியாளரின் கேள்விக்கு,நோய்க்கிருமி வேகமாக பரவும்.சிகிச்சை குறைவாக தான்.இருக்கும் என்றார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் குறித்து கருத்து தெரிவித்த கி.வீரமணி “கொள்கை என்னவென்று கூறட்டும் பிறகு பார்க்கலாம்..” என தெரிவித்தார்.