டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கடந்த மாதம் 26ம் தேதி நடந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை 1,80,200 பேர் எழுதினர். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுதிய 1.80 லட்சம் பேரில் 48,248 பேர் தேர்ச்சி பெற்றனர். டெல்லி ஐஐடி மண்டலத்தில் வேத் லஹோதி 360-க்கு 350 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.