லக்னோ: உத்தரபிரதேச துத்தி தொகுதியை சேர்ந்த ராம்துலர் கோண்ட் கடந்த 2014ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் துத்தி தொகுதி பாஜ எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பாலியல் பலாத்கார வழக்கில் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் ராம்துலர் கோண்ட் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.