இஸ்ரோ நிறுவனர் விக்ரம்சாராபாய் மகன் கார்த்திகேய சாராபாய் இது குறித்து கூறும்போது, இது மிகவும் முக்கியமான நாள். மற்றவற்றில் இருந்து வேறு பட்ட ஒரு செயல்முறையின் மூலமாகவும், துல்லியமாகவும் சந்திரயான்-3ஐ அனுப்ப முடிந்தது இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் மனித குலத்துக்கே ஒரு அற்புத விஷயமாக இருக்கிறது. அறிவியல்,ெ பாறியியல் ஆகியவற்றில் ஏற்படும் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்கிறோம். நிலவின் தென் துருவத்தில் யாராலும் இறங்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது இந்தியாக அங்கு தரை இறங்கியுள்ளது, மனித குலத்துக்கு ஒரு பெரிய விஷயம்.