ஐதராபாத்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 267 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்தது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் 89 ரன்கள், அபிஷேக் ஷர்மா 46 ரன்கள் குவித்தனர். ஷாபாஸ் அகமது இறுதிவரை அவுட் ஆகாமல் 59 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். டெல்லி அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.