Thursday, February 22, 2024
Home » ரூ1.72 கோடி பெற்ற விவகாரம்; கேரள முதல்வர் மகளின் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை: ஒன்றிய அரசு அதிரடி

ரூ1.72 கோடி பெற்ற விவகாரம்; கேரள முதல்வர் மகளின் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை: ஒன்றிய அரசு அதிரடி

by Neethimaan


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் ஒரு பிரபல தனியார் தாது மணல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. இதில் கேரள முதல்வர் பினராய் விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தி வரும் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு 3 வருடங்களில் ரூ1.72 கோடி பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின. வருமானவரித்துறை நடத்திய விசாரணையில் வீணா விஜயனின் நிறுவனம் எந்த சேவையும் அளிக்கவில்லை என தெரியவந்தது. இது குறித்து வருமானவரித்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வீணா விஜயனின் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்த ஒன்றிய கம்பெனிகள் விவகாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக கர்நாடகா, புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இக்குழுவுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. வீணா விஜயனின் நிறுவனம் தவிர கேரள அரசு தொழில் அபிவிருத்திக் கழகம் மற்றும் கொச்சி தாது மணல் நிறுவனத்திற்கு எதிராகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi