Sunday, October 6, 2024
Home » இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி!

by Suresh

ஹைதராபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்த இந்திய அணி 202 ரன்களில் ஆல் ஆகி தோல்வியடைந்தது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில்களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஷ்வால் 80 (74), கே.எல்.ராகுல் 86 (123), ஜடேஜா 87 (180) ரன்களை குவித்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்களை அடித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதை தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 420 ரன்களை குவித்து இந்திய அணிக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா மட்டுமே 39 ரன்கள் அடிக்க, ஜெய்ஷ்வால் 15, ஷுப்மன் கில் 0, ராகுல் 22, அக்சர் படேல் 17, ஷ்ரேயஸ் ஐயர் 13, அஸ்வின் 28, பரத் 28, ஜடேஜா 2 என மற்ற வீரர்கள் சொதப்பினார்.

இதனால் இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டாம் ஹர்ட்லி 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi