Saturday, May 18, 2024
Home » I.N.D.I.A. கூட்டணியின் தூண் மம்தா பானர்ஜி.. அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தொகுதி பங்கீட்டு உடன்பாடு எட்டப்படும்: ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை

I.N.D.I.A. கூட்டணியின் தூண் மம்தா பானர்ஜி.. அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தொகுதி பங்கீட்டு உடன்பாடு எட்டப்படும்: ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை

by Nithya

டெல்லி: I.N.D.I.A. கூட்டணியின் தூண் போன்றவர் மம்தா பானர்ஜி என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதேவேளை ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. என்ற கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, வரும் நாடாளுமன்ற தேர்தலை I.N.D.I.A. கூட்டணி இணைந்து சந்திக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள், தொகுதிகள் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளை பங்கிடுவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது; I.N.D.I.A. கூட்டணியின் தூண் போன்றவர் மம்தா பானர்ஜி என்று பாராட்டியுள்ளார். மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை செய்ய முடியாது. திரிணாமுல் காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் விவாதித்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தொகுதி பங்கீட்டு உடன்பாடு எட்டப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

five + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi