சென்னை: மேற்கு தாம்பரம் அருகே குட்வில் நகரில் ரவுடி வெங்கடேசன் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ரவுடி வெங்கடேசன் மீது பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை செய்யப்பட்ட ரவுடி வெங்கடேசன், முடிச்சூர் பாஜக பட்டியலின மண்டல தலைவராக இருந்தவர்.