புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கடந்த ஏப்.25ம் தேதி புகார் எழுந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர்.
இதுதொடர்பாக முதலில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட நபர் உள்பட 3பேருக்கு சிபிசிஐடி போலீசார் நேற்றுமுன்தினம் சம்மன் அனுப்பினர். அதன்படி 3 பேரும், நேற்று புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கூறுகையில், அடுத்த கட்ட நகர்வு பின்னர் தெரியவரும் என்றனர்.