சென்னை: இந்தியாவை INDIA கூட்டணி மீட்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவே சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இலவசம் என்று மலிவாக வரையறுக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு திட்டமும் சமூக நல திட்டம்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.