வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சை கேட்டு வாக்களித்த மக்களுக்கு மாற்றத்தை தராவிட்டாலும், ஏமாற்றத்தை தராத வகையில் ஆட்சி நடத்துங்கள்: முதல்வர் விஜய்க்கு எடப்பாடி அறிவுரை

சென்னை: தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சை கேட்டு வாக்களித்த மக்களுக்கு மாற்றத்தை தராவிட்டாலும், ஏமாற்றத்தை தராத வகையில் ஆட்சி நடத்துங்கள் என்று முதல்வர் விஜய்க்கு எடப்பாடி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘மாற்றம் கொண்டு வருவோம்’ என்று சொல்லி ஆட்சி அமைத்த தவெக அரசில், அடாவடித்தனங்கள்...

300 அரசு பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக நிறுத்தி வைத்திருப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: முதலமைச்சர் விஜயின் 52வது பிறந்தநாளை ஒட்டி புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும்...

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த ‘ஸாம்பி’ புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

வடகிழக்கு சைபீரியாவின்(Siberia) உறைபனி பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்து கிடந்த மிகச்சிறிய புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பல்லாயிரம் ஆண்டுகள் ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு மீண்டும் உயிர் பெற்று ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சைபீரியாவின் அலசேயா நதி (Alazeya River) அருகில் பூமிக்கு அடியில் இருந்து நிரந்தரமான பனிப்பாறைக்குள் இந்த நுண்னுயிரை ரஷ்யா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்....

செவ்வாயில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு - விஞ்ஞானிகளின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு!

செவ்வாய் கிரகத்தில் அதீத நச்சு சூழலிலும் உயிரனங்கள் வாழ முடியும் என்ற வியக்கத்தக்க உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதலால் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் நச்சுத்தன்மைகள் கொண்ட மண் ஆகியவற்றை செயற்கையாக உருவாக்கி நடத்தப்பட்ட சோதனையில் ஈஸ்ட் செல்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள் (Bacteria) உயிர் பிழைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தங்களை...

தென்னிந்திய மக்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கருப்பு சட்டம்தான் தொகுதி மறுவரையறை: பெரம்பலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். பரப்புரையில் முதல்வர் கூறியதாவது: இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே, தென்னிந்தியா மக்களின் எதிர்காலத்தையே...

ஒடிசா மாநிலங்களவைத் தேர்தலில், பாஜக நிறுத்திய வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சஸ்பெண்ட்

ஒடிசா: மாநிலங்களவைத் தேர்தலில், பாஜக ஆதரவு வேட்பாளரான திலீப் ரேயின் கட்சி உத்தரவை மீறி அவருக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் தனது மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை, ஒடிசா காங்கிரஸ் கமிட்டி இடைநீக்கம் செய்தது உத்தரவிட்டுள்ளது. சனகெமுண்டி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் சந்திர ஜெனா, பராபட்டி-கட்டாக் சட்டமன்ற உறுப்பினர் சோபியா ஃப்ர்தௌஸ் மற்றும் மோகனா சட்டமன்ற உறுப்பினர்...

பீகார் சட்டமன்ற தேர்தல்: ரகோபூர் சட்டமன்ற தொகுதியில் தேஜஸ்வி பின்னடைவு

  பீகார்: பீகார் தேர்தலில் ரகோபூர் சட்டமன்ற தொகுதியல் 3,016 வாக்கு வித்தியாசத்தில் தேஜஸ்வி பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரகோபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் யாதவ் முன்னிலையில் உள்ளார். ரகோபூர் சட்டமன்ற தொகுதியில் 106 வாக்கு வித்தியாசத்தில் தேஜஸ்வி பின்தங்கியுள்ளார். ...

கரூர் சம்பவம் குறித்து விஜய் பேசுவது அரசியல் நேர்மையற்ற கருத்து: விமானநிலையத்தில் திருமாவளவன் பேட்டி

மீனம்பாக்கம்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, பெங்களூருக்கு புறப்படும்முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காவல்துறையில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் பாலியல் சீண்டல்கள் இருக்கிறது. தவறு செய்தவர்களை அரசு உடனடியாக கைது செய்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. பெண்களுக்கு பாலியல் சீண்டல் ஏற்படுவதை தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மற்ற...

அறுவை சிகிச்சை ரோபாட்டிக்ஸ் துறையில் இந்தியாவின் அடுத்த உயர்நிலை: Meril நிறுவனம் Mizzo Endo 4000ஐ அறிமுகப்படுத்துகிறது –மேம்பட்ட மென்மையான திசு ரோபோ சிஸ்டம்

MedTech கண்டுபிடிப்புகளில் இந்தியாவை முன்னணியில் நிறுத்த, AI, 5G-இயக்கப்பட்ட தொலை அறுவை சிகிச்சை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு அம்சங்களை அனைத்தையும் புரட்சிகரமான சிஸ்டம் புதிதாக ஒருங்கிணைக்கிறது. குஜராத்தின் வாபியில் - இந்திய சுகாதாரம் மற்றும் உலகளாவிய மருத்துவ தொழில்நுட்பத்திற்கான ஒரு மைல்கல் தருணத்தில், Meril(இந்தியாவின் முன்னணி மருத்துவ சாதன நிறுவனங்களில் ஒன்று) அடுத்த தலைமுறை மென்மையான...

24 மணி நேரத்திற்கு முன்பு ரயில் டிக்கெட் சார்ட்டை வெளியிட ரயில்வே திட்டம்

டெல்லி : ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட் சார்ட்டை வெளியிட ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில் டிக்கெட் சார்ட் தற்போது 4 மணி நேரத்துக்கு முன்பு வெளியிடப்பட்டு வருகிறது. புதிய முறை ராஜஸ்தான் பிகானீர் ரயில்வே கோட்டத்தில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ...