வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற அடையாள அட்டை பெற வேண்டும்
அரியலூர், ஜன. 12: அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அடையாள அட்டையை பெற்று கொள்ள வேண்டும் என அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு 10ம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத அல்லது பெற்றவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்,...
அரியலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 201 கிராம ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா
அரியலூர், ஜன.12: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும் மற்றும் சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும், பொங்கல் திருவிழாவானது சமத்துவ பொங்கல் விழாவாக வரும்...
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவுக்கான இது நம்ம ஆட்டம் போட்டிகளுக்கான கண்காணிப்புக்குழு கூட்டம்
அரியலூர், ஜன.10: முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாக்கான இது நம்ம ஆட்டம் போட்டிகளுக்கான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்- 2026, ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம்-100 மீ மற்றும் குண்டு...
போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஜெயங்கொண்டம் ஜன.10:போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படியும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர வழிகாட்டுதலின் படி ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் 2026 ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று ஜெயங்கொண்டம்...
திருமானூர் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் உருளை கருவியை பயன்படுத்த வேண்டும்: வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுறுத்தல்
ஜெயங்கொண்டம், ஜன.10: திருமானூர் விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு உருளை கருவியினை பயன்படுத்திட வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்புவிடுத்துள்ளார். அரியலூர் மாவட்டம், திருமானூர் விவசாயிகள் நடப்பு நவரை பருவத்தில் நேரடி நெல் விதைப்பு செய்வதன் மூலம் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதுடன் பயிர் சாகுபடி செலவினை குறைத்து அதிக மகசூல் பெறலாம். மேலும் நேரடி விதைப்பு...
அரியலூர் மாவட்டத்தில் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு பயிற்சி
அரியலூர், ஜன.9: அரியலூர் மாவட்டம் வேளாண்மை அலுவலகத்தில் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் ரபி பருவத்தில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு இணைய வழி கணக்கெடுப்பு பணி வேளாண்மை மற்றும் சகோதரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணியை மேற்கொள்ள குறைந்த அளவு தன்னார்வலர்கள் முன் வந்ததால் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிப்பதற்கு...
விக்கிரமங்கலம் அருகே கொட்டகையில் இறந்து கிடந்த முதியவர்
தா.பழூர் ஜன. 9: விக்கிரமங்கலம் அருகே விவசாய நிலத்தில் கொட்டகையில் இறந்து கிடந்த முதியவர் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(70). இவர் விவசாயி. இவர் மேலத்தெரு அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து வாழ்ந்து வருகிறார்....
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 4வது நாளாக காத்திருப்பு போராட்டம்
அரியலூர், ஜன. 9: அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அரியலூரில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் 4 ஆவது நாளாக நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்...
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கல்
ஜெயங்கொண்டம், ஜன.8: ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மடிக்கணினி வழங்கினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தா. பழூர் ஐடிஐ மாணவ, மாணவிகளுக்கும் 288 பேருக்கு மடிக்கணினி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி...


