பஜாஜ் நிறுவனம் முதன் முதலாக சிஎன்ஜி பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. பைக் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இதன் சோதனை ஓட்டம் குறித்த படங்கள் சமீபத்தில் வைரலாகின. இது ‘பிரஸ்சர்’ என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. இதனிடையே ‘பஜாஜ் பைட்டர்’ என்ற பெயரை டிரேடு மார்க்காக பஜாஜ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. எனவே, சிஎன்ஜி பைக்கின் பெயர் இதுவாகவும் இருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. இந்த பைக் அடுத்த மாதம் மத்தியில் சந்தைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.