Wednesday, February 21, 2024
Home » ஆஸி. 318 ரன் குவிப்பு பாகிஸ்தான் திணறல்: கம்மின்ஸ் அசத்தல்

ஆஸி. 318 ரன் குவிப்பு பாகிஸ்தான் திணறல்: கம்மின்ஸ் அசத்தல்

by Karthik Yash

மெல்போர்ன்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்த நிலையில், பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து திணறி வருகிறது. ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட், மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில், ஆஸி. முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்திருந்தது (66 ஓவர்). லாபுஷேன் 44, டிராவிஸ் ஹெட் 9 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். அரை சதத்தை கடந்த லாபுஷேன் 63 ரன், டிராவிஸ் 26 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு வந்தவர்களில் மிட்செல் மார்ஷ் 41, கேப்டன் பேட் கம்மின்ஸ் 13 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். ஆஸி. முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்து ஆல் அவுட்டானது (96.5 ஓவர்). பாக். தரப்பில் அமெர் ஜமால் 3, அப்ரிடி, ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவுக்கு உதிரிகளாகவே 52 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்துள்ளது (55 ஓவர்).

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்கார் அப்துல்லா ஷஃபிக் 62 ரன், கேப்டன் ஷான் மசூத் 54 ரன் எடுத்தனர். பாபர் 1 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார். ஷகீல் 9, ஆஹா சல்மான் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆஸி. தரப்பில் பேட் கம்மின்ஸ் 3, நாதன் லயன் 2, ஹேசல்வுட் 1 விக்கெட் எடுத்தனர். முகமது ரிஸ்வான் 29, அமெர் ஜமால் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, பாக். இன்னும் 124 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

You may also like

Leave a Comment

10 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi