சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மழையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு மழை வந்தாலும் நீர் தேங்காதபடி இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் பேட்டியளித்தார்.