சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டணி தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். தற்போது நடந்துவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.