சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கில் குற்றவியல் நடவடிக்கைக்கு நேற்று ஆளுநர் அனுமதி அளித்திருந்தார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
223