இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்:
Technician (Gr-II) (WG-III):
i) Electronics Mechanic: 7 இடங்கள்.
ii) Electrician: 6 இடங்கள்
iii) Machinist: 7 இடங்கள்
iv) Fitter: 10 இடங்கள்.
தகுதி: மெட்ரிகுலேசன்/எஸ்எஸ்சி அல்லது அதற்கு சமமான தகுதியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். என்ஏசி பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெட்ரிகுலேசன்/எஸ்எஸ்சி அல்லது அதற்கு சமமான தகுதியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ சான்றிதழ், என்ஏசி பயிற்சி பெற்றிருப்பதோடு உற்பத்தி ஆலையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 13.04.2024 அன்று 27க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://www.ecil.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.04.2024.