சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் குறைந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.